UPDATED : ஜன 30, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 09:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
சமஸ்கிருதம் கற்க விரும்பும், 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, திருப்பூர் சமஸ்கிருத பாரதி சார்பில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. ஞாயிறு தோறும், காலை, 10:30 முதல், 12:30 மணி வரை, பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சி பெற்று வருவோருக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது; பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அடுத்த ஆறு மாதகால அளவிலான சான்றிதழ் தேர்வுக்கான பயிற்சி, பிப்., 4ம் தேதி துவங்கும். விருப்பமுள்ளவர், 93632 22184 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.