UPDATED : பிப் 06, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 09:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரிக்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், நம்பிக்கைப் பற்றாக்குறை ஒருபோதும் திடீரென ஏற்படாது; இது ஒரு நீண்டகால செயல்முறையின் விளைவாக ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் வைத்திருக்கும் மற்றவரது மீதான எண்ணத்தை, ஆழ்ந்த சுய பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி 6வது ஆண்டாக நடைபெற்றது. கடந்த ஆண்டு மொத்தம் 31.24 லட்சம் மாணவர்கள், 5.60 லட்சம் ஆசிரியர்கள், 1.95 லட்சம் பெற்றோர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டில், 2.26 கோடி பேர் இந்நிகழ்ச்சிக்காக பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.