sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வாழ்க்கையில் முன்னேறுவது தான் உண்மையான பலம்: மனோஜ் சோப்ரா

/

வாழ்க்கையில் முன்னேறுவது தான் உண்மையான பலம்: மனோஜ் சோப்ரா

வாழ்க்கையில் முன்னேறுவது தான் உண்மையான பலம்: மனோஜ் சோப்ரா

வாழ்க்கையில் முன்னேறுவது தான் உண்மையான பலம்: மனோஜ் சோப்ரா


UPDATED : பிப் 07, 2024 12:00 AM

ADDED : பிப் 07, 2024 09:34 AM

Google News

UPDATED : பிப் 07, 2024 12:00 AM ADDED : பிப் 07, 2024 09:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
வாழ்க்கையில் முன்னேறுவது தான் உண்மையான பலம் என்று உலகின் வலிமையான மனிதனான மனோஜ் சோப்ரா மாணவர்களிடம் கலந்துரையாடலில் தெரிவித்தார்.இந்தியாவின் ராய்ப்பூரைச் சேர்ந்த மனோஜ் சோப்ரா.உலகின் 14வது வலிமையான மனிதராக இடம் பிடித்துள்ளார். இவர் நேற்று புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பள்ளி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார்.கலந்துரையாடலில் உலகின் வலிமையான மனிதனான மனோஜ் சோப்ரா பேசியதாவது:
உடல் வலிமை தான் பெரியது என்று ஆரம்ப காலத்தில் நினைத்தேன்.இதனால் ஒரு சண்டையில் எதிரியை கடுமையாக அடித்தேன். ஆனால் அந்த சம்பவம் இறுதியில் என்னை சிறையில் தள்ளியது. இது என்னை வாழ்க்கையை புரிந்து கொள்ளவும் செய்தது.இது என்னுடைய பாதை இல்லை என்பதை ஆழமாக உணர்ந்தபோது, உலகின் வலிமையான மனிதர் போட்டி என்ற நிகழ்ச்சியின் மீது என் ஆர்வம் சென்றது. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லை என்பதை கவனித்தேன். அன்றுதான் உலகின் வலிமையான மனிதராக வேண்டும் என்று கனவு கண்டேன்.அந்த நிகழ்ச்சி எனது மனதை முழுவதுமாக மாற்றியது.அந்த போட்டியில் நம் நாட்டின் கொடியை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினேன். அதை அடைய கடுமையாக உழைத்தேன். சென்னையில் நடந்த இந்தியாவின் வலிமையான மனிதர் போட்டியில் பங்கேற்றேன். பின்னர், ஆசியா ஸ்ட்ராங்கஸ்ட் மேன் போட்டிக்கு சென்றேன். அங்கும் வென்றேன். அதையடுத்து கனடாவில் உள்ள உலகின் வலிமையான மனிதன் போட்டிக்கு அழைப்பு வந்தது. அங்கு 14வது இடத்தை பிடித்தேன்.உடல் பலத்தைவிட, வாழ்கையில் முன்னேறுவது தான் உண்மையான பலம்.அதை நோக்கி மாணவர்களான நீங்கள் பயணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us