திருப்பூர் தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது
திருப்பூர் தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது
UPDATED : பிப் 23, 2024 12:00 AM
ADDED : பிப் 23, 2024 07:21 AM
திருப்பூர்:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் மொழியின் வளர்ச்சியை முன்னிறுத்தி செயல்படும் சங்கங்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கடந்த, 2022ம் ஆண்டுக்கான விருதுகள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.திருப்பூர் தமிழ்ச்சங்க தலைவர் முருகநாதன் கூறியதாவது:
கடந்த, 1993ல், திருப்பூர் தமிழ்ச்சங்கம் துவக்கப்பட்டது. தமிழ் சார்ந்து, மாதம், இரு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆண்டுதோறும், திருப்பூர், பெருமாள் கோவிலில் நவராத்திரியன்று, 10 நாட்கள், பள்ளி மாணவ, மாணவியர் வாயிலாக சங்க இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளிகளை தேர்வு செய்து, இலக்கிய விருது வழங்கி வருகிறோம். நாவல், கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் மற்றும் நாடகம் ஆகிய துறைகளில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து, பல்வேறு பிரிவுகளில், 21 பரிசுகளை வழங்கி வருகிறோம்.ஆண்டுதோறும், கருத்துப்பட்டறை நடத்தி, படைப்பாளிகள், தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள ஏற்பாடு செய்கிறோம். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ்ப்பாடத்தில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு ஊக்கப்பரிசு வழங்கி வருகிறோம்.திருப்பூரில் உள்ள பொது நுாலகங்கள், கோவை, திருப்பூர் மற்றும் சென்னை புழல் சிறைவாசிகளுக்கு, புத்தகம் நன்கொடை வழங்கி வருகிறோம். அமெரிக்க தமிழ்ச்சங்கம், கோல்கத்தா தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்சங்கங்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.