பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்
பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்
UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 02, 2024 09:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 1) துவங்கி மார்ச் 22 வரை நடக்கிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ல் துவங்கி மார்ச் 25 வரை நடக்கிறது. தேர்வை கண்காணிக்க 9 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கலெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார், மின்வாரியம், போக்குவரத்து, கல்வித்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. மதுரை கண்காணிப்பு அலுவலர் நாகராஜமுருகன் தலைமை வகித்தார்.

