UPDATED : மார் 03, 2024 12:00 AM
ADDED : மார் 03, 2024 09:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
பாரதியார் பல்கலை தாவரவியல் துறை சார்பில், வளர்ந்த இந்தியாவுக்கான உள்நாட்டு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில், தேசிய அறிவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் மணியன் தலைமைவகித்து, நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். இந்திய கல்வி முறை, உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் ஆராய்ச்சியில் அதன் தாக்கம் குறித்து விளக்கமளித்தார்.கிராமப்புறங்களில் மக்கள் எதிர்கொள்ளும், அன்றாட சவால்களுக்கு உள்நாட்டு தொழில்நுட்பங்களில் தேவை, பாரம்பரிய நுட்பமான அறிவை பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.இதில், தாவரவியல் துறைத்தலைவர் பரிமேலழகன், பேராசிரியர்கள் வசந்த், குருசரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

