புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: சோம்நாத்
புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: சோம்நாத்
UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 10:38 PM
புதுடில்லி:
ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்பட்ட தினத்தில் தனக்கு வயிற்று பகுதியில் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தற்போது குணம் ஆகிவிட்டேன்" என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.இது குறித்து சோம்நாத் கூறியிருப்பதாவது:
ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் தனக்கு வயிற்று பகுதியில் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.சந்திரயான்- 3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட அந்த நாளில் உடலில் சில பிரச்னைகள் இருந்ததை உணர்ந்தேன். தற்போது, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன். தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில் சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு மருத்துவமனையில் தங்கி 4 நாட்கள் சிகிச்சை எடுத்துள்ளார்.

