இந்தியாவில் போர்ட்டபிள் ராக்கெட்: ஸ்வீடன் நிறுவனம் தயாரிக்கிறது
இந்தியாவில் போர்ட்டபிள் ராக்கெட்: ஸ்வீடன் நிறுவனம் தயாரிக்கிறது
UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 10:40 PM
புதுடில்லி:
பாதுகாப்புத் தயாரிப்பில் தன்னிறைவை அடைய விரும்பும் மத்திய அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக, காலாட்படையால் பரவலாக பயன்படுத்தப்படும், கார்ல் கஸ்டாப் எம்4 மல்டி ரோல் ராக்கெட் அமைப்பு, இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.இந்த போர்ட்டபிள் ராக்கெட் சிஸ்டம் ஸ்வீடனை சேர்ந்த சாப் நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ளது. இதன் தயாரிப்பு நிலையம் ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் அமையவுள்ளது. கார்ல் கஸ்டாப் கடந்த 1976ம் ஆண்டு முதலே இந்திய ராணுவத்தால் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, எளிதாகக் கையாளக்கூடிய, சிங்கிள் -ஷாட் ராக்கெட் அமைப்பு.மேலும், இது டாங்குகள் போன்றவற்றை அழிக்கப் பயன்படுகிறது. இந்த ராக்கெட்டின் எம்4 ரக தயாரிப்பு தான் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது தான், கார்ல் கஸ்டாப் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ராக்கெட் தயாரிப்பு வசதியை அமைப்பதற்காக, சாப் நிறுவனம் மத்திய அரசிடமிருந்து 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கான ஒப்புதல் பெற்று, சாப் எப்.எப்.வி.ஓ., இந்தியா என்ற பெயரில் தயாரிப்பை துவங்குகிறது.இதன் வாயிலாக, சாப் இந்தியாவில் சொந்தமாக பாதுகாப்பு உற்பத்தியை துவங்கிய முதல் வெளிநாட்டு நிறுவனமாகிறது.*காலாட்படையால் பயன்படுத்தப்படும் இந்த ராக்கெட், டாங்குகளை அழிக்க உதவும்*ஸ்வீடனை சேர்ந்த &'சாப்&' நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ளது*இரண்டாம் உலகப் போரின் போது தான், இந்த ராக்கெட் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

