UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 10:40 PM
சென்னை:
மாணவர்களுக்கு பள்ளிகளில் வங்கி கணக்கு துவக்கப்படுவதுடன், ஜாதி, இருப்பிடம், வருமான சான்றிதழ்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசின் செய்திக்குறிப்பு:
அனைத்து வகை பள்ளிகளிலும், 2024 - 25ம் ஆண்டில், ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு, பள்ளிகள் வழியாகவே வங்கி கணக்குகள் துவங்க ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகளிலேயே ஆதார் பதிவு புதுப்பித்து, வங்கி கணக்குடன் இணைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும்.மேலும், கல்வி உதவித்தொகை பெற பள்ளிகள் வழியே விண்ணப்பிக்கலாம். அப்போது தேவைப்படும், ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ்கள் மற்றும் முதல் தலைமுறை பட்ட தாரி சான்றிதழ் ஆகியவற்றுக்கு, பள்ளிகளில் இருந்து எமிஸ் தளத்தில் விண்ணப்பிக்கப்பட்டு, மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

