புதுச்சேரி, சென்னை விநாயகா மிஷனுக்கு சிறந்த கல்லுாரி விருது
புதுச்சேரி, சென்னை விநாயகா மிஷனுக்கு சிறந்த கல்லுாரி விருது
UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 10:42 PM
புதுச்சேரி:
சேலம் விநாயகா மிஷனின் புதுச்சேரி, சென்னை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கையை ஆராய்ந்து விருது வழங்கப்பட்டது.இந்தியாவின் லியோ-1 நிறுவனம் கல்வி நிறுவனம் தரமான கல்வி, கல்வியியல் சார்ந்த நிதி மேலாண்மை குறித்து ஆலோசனை அளிப்பதோடு, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அளித்து வருகின்றது.மேலும் கல்வி துறையில் சிறந்த முன் மாதிரியாக செயல்படும் நிறுவனங்களை அடையாளம் கண்டு விருது வழங்கி அங்கீகரித்து வருகின்றது. அதனடிப்படையில், அண்மையில் சிறந்த முன் மாதிரி கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது. விழாவில், நாட்டின் சிறந்த பள்ளி, கல்லுாரி உயர் கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.விழாவில் சேலம் விநாயகா மிஷனின் புதுச்சேரி, சென்னை பகுதிகளில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை ஆராய்ந்து, திறன் மேம்பாடு மற்றும் கற்றல் சார்ந்த முயற்சியில் சிறந்து விளங்கும் கல்லுாரி என்ற விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை லியோ-1 நிறுவனத்தின் இணை நிறுவனர் நவிஸ் ரெட்டி வழங்கினார்.விழாவில், கல்லுாரியின் சிறந்த கற்றல்-கற்பித்தலின் அனைத்து முயற்சிக்கும் அடித்தளமிட்ட துறை டீனுக்கு சிறந்த தலைவருக்கான விருது வழங்கப்பட்டது. இவ்விருதுகள் பெற்றதற்காக பல்கலைக்கழக வேந்தர் கணேசன், துணை தலைவர் அனுராதா கணேசன், துறை பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

