UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 05:12 PM
கோவை:
கோவையில் கருணாநிதி நூலகம் அமைப்பது குறித்து, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.அதன்பின், அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வரிடம் மதுரையை போல கருணாநிதி நூலகம் கோவையில் அமைக்க வேண்டும் என மக்கள் கேட்டனர் என தெரிவித்து இருந்தேன்.நிதி நிலை அறிக்கையில் கருணாநிதி நூலகம், அறிவியல் மையம் அறிவிக்கப்பட்டது.எந்த இடத்தில் அமைக்கலாம் என அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன்.ரேஸ்கோர்ஸ் பகுதியில்6 ஏக்கர் நிலம் இருக்கின்றது.சிறைச்சாலை பகுதியில் இதற்கு 7 ஏக்கர் இடத்தைஒதுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர் இரு வரைபடத்தையும் முதல்வரிடம் காட்டி , அவர் தேர்வு செய்யும் அந்த இடத்தை எடுப்போம்.ரேஸ்கோர்ஸ், சிறைச்சாலை வாளகம் என இரண்டுமே முதல்வருக்கு தெரிந்த இடம். அவர் ஆலோசனை பெற்று இடம் தேர்வு செய்யப்படும்.பொதுப்பணி துறை மீது இருக்கும் நம்பிக்கை காரணமாக 2026 ஜனவரியில் கட்டயாமாக நூலகத்தை திறப்பேன் என முதல்வர் தெரிவித்து இருந்தார்.நூலகம் மட்டுமல்ல அறிவியல் தொடர்பானவையும் இடம் பெற வேண்டும் என சொல்லி இருக்கின்றார். இடம் தேர்வு செய்யப்படுவதற்காக வந்து இருக்கின்றேன். மேற்கு புறவழிச்சாலை பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்.கோவையில் எல் அண்டு டி ஒப்பந்தம் இன்னும் முடியாததால் அதை 4 வழி சாலையாக்க முடியவில்லை. எல் அண்டு டி நிர்வாகத்திடம் இது குறித்து பேசி வருகின்றோம். அவர்களை போட சொன்னோம். அவர்கள் முடியாது என்று சொல்லி இருக்கின்றனர். தொடர்ந்து பேசி வருகின்றோம்உக்கடம் மேம்பாலம் ஒப்பந்ததாரர் மார்ச் 30க்குள் பணிகளை முடித்து விடுவதாக சொல்லி இருக்கின்றார். அதிகாரிகளும் முடித்து விடலாம் என்று சொல்லி இருக்கின்றனர். சாலை விரிவாக்க பணிகளின் போது மரத்தை வெட்டுவது தவிர்க்க முடியாது. இந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் மரக்கன்றுகள் துறையின் சார்பில் நடப்பட்டுள்ளன. 2024 டிசம்பருக்குள் அவினாசி சாலையில் பாலம் வேலையை முடித்து தர சொல்லி இருக்கின்றேன்.மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு, எய்ம்ஸ்க்கு இணையாக கிண்டியில் 240 கோடியில் மருத்துவமனை கட்டி இருக்கின்றோம். எய்ம்ஸ் மருத்துவமனையில் இல்லாத விஷயங்கள் கிண்டி மருத்துவமனையில் இருக்கின்றது. அறிவித்து 13 மாத காலத்தில் திறத்து இருக்கின்றோம்.பெரும் பலம் கொண்ட மத்திய அரசு எய்ம்ஸ்யை கட்டி இருக்க முடியாதா ? இப்போது அரசியலுக்காக அதை செய்கின்றனர். அது கானல் நீராகவே இருந்து கொண்டு இருக்கின்றது. நாங்கள் யாரும் குறுக்காக இல்லை. மத்திய அரசுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்இவ்வாறு அமைச்சர் வேலு கூறினார்.

