UPDATED : மார் 07, 2024 12:00 AM
ADDED : மார் 07, 2024 09:18 AM
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் உயிரி மருத்துவம் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி, பதிவாளர் செந்தில் ராஜன் பேசினர். கருத்தரங்க அமைப்புச் செயலாளர் கருணாகரன் வரவேற்றார். துறை தலைவர் கவிதா பேசினார். கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி முன்னிலை வகித்தார்.திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியர் ரவிச்சந்திரன், பூண்டி புஷ்பம் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் ரவிச்சந்திரன், கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் வாழ்த்தினர்.பேராசிரியர் சுப்பு நன்றி கூறினார். மேலும், எத்தியோப்பியா ஜும்மா பல்கலை பேராசிரியர் குமரேசன், சீனா மரைன் கல்லூரி ஆராய்ச்சியாளர் விஜயகுமார், தென்கொரியா ஆசைத்தம்பி மலாயா பல்கலை பேராசிரியர் ரமேஷ் காசி பங்கேற்றனர்.

