அங்கன்வாடி மையங்களை சுகாதாரமாக பராமரித்தால் பரிசு: கலெக்டர் அறிவிப்பு
அங்கன்வாடி மையங்களை சுகாதாரமாக பராமரித்தால் பரிசு: கலெக்டர் அறிவிப்பு
UPDATED : மார் 07, 2024 12:00 AM
ADDED : மார் 07, 2024 09:20 AM
ராமநாதபுரம்:
அனைத்து அங்கன்வாடி மையங்களையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். சிறந்த மையங்கள் தேர்வுசெய்து பரிசு வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன்தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் அருகே சுப்புதேவன் வலசை, வைரவன்கோவில், புதுக்கோயில் ஆகிய இடங்களில் உள்ள அங்கன்வாடிமையம், சத்துணவு சமையல் அறை துாய்மைப்பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வுசெய்தார்.கலெக்டர் கூறியதாவது:
சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மைய கட்டடங்கள் சீரமைத்து பராமரிப்பதுடன், உட்புற சுவர், வெளிப்புற சுவர்களை துாய்மையாக வைத்துகொள்ள வேண்டும். பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையில் உணவு வழங்கவேண்டும்.ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு கண்காணிப்புஅலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பான மையங்களை தேர்வு செய்து அங்குள்ள பணியாளர்களுக்கு பரிசு, பாராட்டுசான்றிதழ் வழங்கப்படும் என்றார்.

