அலைபேசி தொழில்நுட்ப பாதிப்புகளால் அவதி: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அலைபேசி தொழில்நுட்ப பாதிப்புகளால் அவதி: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
UPDATED : மார் 07, 2024 12:00 AM
ADDED : மார் 07, 2024 09:27 AM
சென்னை:
அலைபேசி சேவைகளில் அடிக்கடி இடையூறுகள் ஏற்படுவதால் வாடிக்கையாளர்கள் அவதியடைகின்றனர்.நவீன தொழில்நுட்ப உலகில் மனிதனின் அத்யாவசிய தேவையாக மாறி உள்ளது அலைபேசி. இதற்காக அரசுத்துறை நிறுவனம் பி.எஸ்.என்.எல்., தவிர்த்து பிற தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சேவைகள் வழங்கின்றன. இணையதள சேவையும் அதிவேக பயன்பாடு அதிகரித்துள்ளது. சமீபமாக வாடிக்கையாளர்கள் அழைப்புகள் மேற்கொள்ளும் நிலையில் சரிவர கிடைக்காத நிலை,பேசிக் கொண்டிருக்கும் போது கேட்காத நிலை ,சேவை துண்டிப்பு, கிராஸ்கால் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்னைகள் சமீபமாக வாடிக்கையாளர்களை அவதிக்குள்ளாக்கிறது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மொபைல் நிறுவனங்களின் சேவைத்திறன் நாளுக்கு, நாள் குறைந்து வருவது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்கிறது. இது போன்ற நிலை கடந்த ஓராண்டுகளுக்கு மேலாகவே தொடர்கிறது. சேவைகளை மேம்படுத்தும் பணிகள் நடப்பதால் இது போன்ற தடங்கல் நீடிப்பதாக சம்பந்தப்பட்ட ஆப்பரேட்டர்கள் வாடிக்கையாளர்களை திருப்தி செய்கின்றனர்.இருந்த போதும் இப்பிரச்சனை தொடர்ந்து வருகிறது பொதுவாக மாவட்ட முழுவதும் இப்பிரச்னை தொடர்கிறது. இதில் மலைப்பகுதிகளில் சேவை துண்டிப்பு, சரிவர இணைப்பு கிடைக்காத நிலை என ஏராளமான பிரச்னைகள் எழுகிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

