தர்மபுரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : மார் 08, 2024 12:00 AM
ADDED : மார் 08, 2024 04:09 PM
தர்மபுரி:
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், தர்மபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியிலுள்ள தர்மபுரி அரசு சட்டக்கல்லுாரி மாணவ-, மாணவியர் ஒன்றிணைந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கல்லுாரி முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 3 ம் ஆண்டு சட்டக்கல்லுாரி மாணவர் ரகு தலைமை வகித்தார். 4ம் ஆண்டு மாணவர் கோபு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மேலும், போராட்டங்கள் குறித்து, அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள, சட்டக்கல்லுாரி மாணவ-, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து, வக்கீல்களுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். 3ம் ஆண்டு மாணவர் சந்துரு நன்றி கூறினார்.

