7 நாளில் 80,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு
7 நாளில் 80,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு
UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அரசு பள்ளிகளில் ஒரு வாரத்தில், 80,076 மாணவ - மாணவியர் சேர்ந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, இம்மாதம் 1ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி, தொடக்க பள்ளிகளில், 46,586; நடுநிலை பள்ளிகளில், 21,853; உயர்நிலை பள்ளிகளில் 6,287; மேல்நிலை பள்ளிகளில் 5,350 என, மொத்தம் 80,076 மாணவ -மாணவியர் சேர்ந்துள்ளனர்.அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 10,411 பேர் சேர்ந்துள்ளனர். அடுத்தபடியாக, சேலம் மாவட்டத்தில் 7,890; கிருஷ்ணகிரியில் 7,770 பேர் சேர்ந்துள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில், 292 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.