UPDATED : மார் 15, 2024 12:00 AM
ADDED : மார் 15, 2024 05:30 PM
திருப்பூர்:
நேற்று நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு நடந்தது. இதில், முன்மொழி தமிழ் பாட தேர்வை, 33 பேரும், 88 பேர் ஹோம் சயின்ஸ் தேர்வையும் எழுதினர். அரசியல் அறிவியல் பாட தேர்வை, 25 பேர் எழுதினர். புள்ளியியல் பாட தேர்வில், 850 பேர் எழுதினர். அடிப்படை எலக்ட்ரிக்கல் பாட தேர்வில், 28 மாணவ, மாணவியர் எழுதினர்.தேர்வு மையத்தில் கண்டிப்பு
பிளஸ் 1 தேர்வு நடந்த பல மையங்களில், திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளி உள்ளிட்ட குறிப்பிட்ட சில பள்ளிகளில், தேர்வு கண்காணிப்பாளர்கள், மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டனர். தேர்வு முடியும் வரை, வெளியாட்கள் ஒருவர் கூட, பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. பறக்கும் படை போலீசாரும், தங்கள் வாகனங்களுடன் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

