UPDATED : ஜூலை 31, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் பேசியதாவது: செயல்வழிகற்றல் கல்வி மாணவர்களின் எதிர்கால வாழ்வை அழிவை நோக்கி கொண்டு செல்கிறது. இந்த முறையை கைவிடக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம்.
ஆசிரியர்கள் பணியில் சேரும் இடத்திலேயே மாறுதல் இன்றி ஓய்வு வரை அங்கேயே பணியாற்றுதல், பள்ளிகளில் நிர்வகிப்பு குழு அமைத்தல், குழுவில் அரசியல்வாதிகள் நியமித்தல் என மத்திய அரசு புதிய கல்விமுறையை வகுத்திருந்தது.
இதுபற்றி மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கிடம் பேசும் போது, நிதிஅமைச்சரின் பரிந்துரை என கூறினார். அம்முடிவுகள் நீக்கப்பட்டு புதிய கல்விமுறை வரவுள்ளது. பள்ளிகளில் 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
புதிய சம்பள கமிஷன் பரிந்துரையில் சம்பள உயர்வு வர இருக்கிறது. இதன் மூலம் ஆசிரியர்களுக்கு குறைந்தது ரூ. 21 ஆயிரம் மாத சம்பளம் கிடைக்கும். மத்திய அரசின் சம்பள உயர்வை அப்படியே அமல்படுத்தும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
மதுக்கடைகளில் தீவிர கவனம் செலுத்தும் அரசு பள்ளிகூடம் மீது கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.