கிராம கல்விக்குழு நாள் விழாவில் ‘தினமலர்’ வாசித்த மாணவர்கள்!
கிராம கல்விக்குழு நாள் விழாவில் ‘தினமலர்’ வாசித்த மாணவர்கள்!
UPDATED : ஜூலை 31, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அப்போது, ‘தினமலர்’ நாளிதழை மாணவ, மாணவியர் வாசித்து காண்பித்து அசத்தினர்.
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கற்பிக்கும் முறையை மாற்றி, அவர்களாகவே கல்வி கற்கும் செயல் வழிக்கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளில், படைப்பாற்றல் கல்வி (ஏ.எல்.எம்.,) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கிராம கல்வி குழு நாள் விழா ஜூலை 31ம் தேதி கொண்டாடப்பட்டது.
மாணவ, மாணவியர் தானாகவே நாளிதழ் வாசித்தல், மாணவ, மாணவியரின் கற்பனை திறன் வெளிப்படும் வகையில் பேசுதல் மற்றும் எழுதுதல், எளிமையாக கணக்குகளை போடுதல், பாடல்களை பாடுதல், கதைகள் கூறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் மாணவ, மாணவியர் தங்களது திறனை வெளிப்படுத்தினர். கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், மாணவ மாணவியரின் கற்றல் திறனை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆசிரியர்கள் பேசினர்.
திருப்பூர் வாலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் கவுன்சிலர் கவிதா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குணசேகரன், தலைமையாசிரியர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் அரண்மனை புதூர் பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் தலைமையாசிரியர் ராமசாமி, கிராம கல்வி குழு தலைவர் செல்வம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சிவானந்தம், செயலாளர் குட்டி தங்கவேல், ஆசிரியர் பயிற்றுனர் சாந்தி, தலைமையாசிரியர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டாம் வகுப்பு மாணவன், ‘தினமலர்’ நாளிதழை வாசித்து காண்பித்து, அசத்தினான்.
பல்லடம்: பல்லடம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராம கல்விக்குழு நாள் விழா, கல்வி குழுத்தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது; தலைமை ஆசிரியர் அய்யாவு வரவேற்றார். விழாவில், பல்லடம் நகராட்சி முன்னாள் துணை தலைவர் தர்மராசன் சிறப்புரையாற்றினார்.
வட்டார வள மைய ஆசிரியை பூமதி, செயல்வழிக்கற்றல் முறைப்பற்றி விரிவாக விளக்கினார். விழா நிறைவில், பொதுமக்கள் முன்னிலையில் நாளிதழ்களை மாணவர்கள் சரளமாக வாசித்துக்காட்டினர். இதன்பின், பள்ளி குழந்தைகளுக்கு அறிவு, நீதி போதனைகள் செறிந்த கதைகள் கூறி இனிப்புகள் வழங்கப்பட்டன.