sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வட மாவட்டங்களில் 600 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

/

வட மாவட்டங்களில் 600 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

வட மாவட்டங்களில் 600 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

வட மாவட்டங்களில் 600 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்


UPDATED : ஜூலை 31, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஜூலை 31, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசிரியர் நியமனத்தின்போது வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை  அளிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் ஒரு சில மாதங்களில் நிரப்பப்படும் என்றும், முதற்கட்டமாக 600 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிக்கல்வித் தரத்தில், வட மாவட்டங்கள் தொடர்ச்சியாக பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றன. தென் மாவட்டங்களின் சராசரி தேர்ச்சி 85 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கின்றன.
ஆனால், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம் குறைவாகவே இருக்கின்றன. அதிலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் தொடர்ந்து கடைநிலையிலேயே இருந்து வருகின்றன.
மாணவர்களின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததும், நிரப்பப்படாத அதிகமான ஆசிரியர் காலிப் பணியிடங்களும் கல்வித்தரம் குறைவதற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 160 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற முக்கியப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை இருக்கின்றன.
இதுபோன்ற முக்கியப் பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தான் அதிகமான மாணவர்கள் கடந்த பொதுத் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். ஒரு பாடத்தில் மூன்றாயிரத்து 500 மாணவர்களும், இரண்டு முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஏழாயிரமாகவும் இருக்கின்றன.
போதிய ஆசிரியர்கள் நியமித்து, காலிப் பணியிடங்களை நிரப்பியிருந்தால் இந்த மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கமாட்டர் என்றும், தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருக்கும் என்றும் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் வருத்தப்படுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மாவட்டம் 68 சதவீத தேர்ச்சியும், பிளஸ் 2 தேர்வில் 59.40 சதவீத தேர்ச்சியுமே பெற்றது.
கடலூர் மாவட்டத்திலும் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் 40 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத மோசமான நிலையும் இருக்கின்றன. அதிகமான கிராமப்புற பகுதிகளைக் கொண்ட வட மாவட்டப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டுமென்றால், ஆசிரியர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகின்றன.
வட மாவட்டங்களில் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, முதற் கட்டமாக ஆசிரியர் நியமனம் செய்வதில், இம்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, விரைவில் 600 பட்டதாரி ஆசிரியர்கள் இந்த மாவட்டங்களில் நியமனம் செய்யப்படுவர் என்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வசதியாக, மாவட்டந்தோறும் உள்ள காலிப் பணியிடங்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், வட மாவட்டங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் ஓரிரு மாதங்களில் நிரப்பப்படும் என்று தெரிகிறது.
பின்தங்கிய மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் சாதனை:
கல்வித் தரத்தில் வட மாவட்டங்கள் பின்தங்கியுள்ள போதும், அம்மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் மட்டும் சிறந்து விளங்குவது புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த பொதுத் தேர்வுகளில் வட மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் வருமாறு:
----------------------------------------------------------------------------
மாவட்டம்        பிளஸ் 2 தேர்வு எழுதியோர்    தேர்ச்சி பெற்றோர்  சதவீதம்
----------------------------------------------------------------------------
1. தர்மபுரி                   1921                                1837                 95.63
2. விழுப்புரம்               2495                                2262                 90.66
3. கடலூர்                   3177                                3033                 95.47
4. தி.மலை                 1083                                  949                 87.63
5. வேலூர்                  3063                                 2852                 93.11
6. கிருஷ்ணகிரி            1841                                1692                 91.91
7. சேலம்                    3408                                3298                 96.77
8. காஞ்சிபுரம்              7488                                7186                 95.97
9. திருவள்ளூர்            8188                                7752                 94.68
10. சென்னை             16278                              15404                 94.63
----------------------------------------------------------------------------
இதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மேற்கண்ட எல்லா மாவட்டங்களிலும் 95 சதவீதத்திற்கும் அதிகமாக தேர்ச்சியைப் பெற்று தனியார் பள்ளிகள் சாதனை படைத்துள்ளன.
அரசு பள்ளிகள் தான் கல்வித் தரத்தில் அதிகம் ‘கோட்டை’ விடுகின்றன என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அரசு பள்ளிகளில் முழுமையான அளவில் ஆசிரியர்களை நியமித்து, அதிகாரிகளும், ஆசிரியர்களும் ஈடுபாட்டுடன் உழைத்தால் இப்பள்ளிகளும் சாதனை படைக்கலாம்.






      Dinamalar
      Follow us