துப்புரவு வேலை கேட்டு விண்ணப்பித்த பட்டதாரிகள், ஆசிரியர்கள்
துப்புரவு வேலை கேட்டு விண்ணப்பித்த பட்டதாரிகள், ஆசிரியர்கள்
UPDATED : ஆக 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கான்பூர்: உத்திர பிரதேச மாநிலத்தில் துப்புரவாளர் பணி கேட்டு, முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள், சட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு லட்சம் கிராமங்களில் துப்புறவு பணிக்காக ஆட்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கான்பூரில், 1020 துப்புறவு பணியாளர்களின் காலி இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இதற்கான அறிவிப்பை பார்த்ததும், ஆசிரியர் பணிக்காக முதுகலை பட்டம் பெற்ற( எம்.எட்.,) 35 பேரும், இளங்கலை பட்டம் ( பி.எட் .,) பெற்ற 49 பேரும் மற்றும் எல்.எல்.பி., பட்டம் பெற்றவர்கள், பண்டிதர் பட்டம் பெற்றவர்கள் துப்புரவு பணி செய்ய தயாராக இருப்பதாக விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
விண்ணப்பித்தவர்களில் 250 பிராமணர்கள் உட்பட 461 பேர் உயர் ஜாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்தது குறித்து பட்டதாரிகள் கூறுகையில், ‘ஜாதிக்கோட்பாடுகள், வேலைக்கு ஆதாரமற்ற படிப்புகள், இவை இரண்டும் நாட்டில் வேரூன்றியுள்ளன. இவைகளை களைய அரசுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டத்தினால் மக்கள் குமுறுகின்றனர்.
எம்.ஏ., எம்.எட்., சாஸ்திரி போன்ற பட்டங்களினால் என்ன உபயோகம். அவைகளால் இரண்டு வேளை சோறு கூட கிடைக்கவில்லையே’ என வருத்தத்துடன் கூறினர்.
கான்பூர் நகரில் காலியாக உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கு ஒன்பதாயிரத்து 30 பேர் விண்ணப்பத்துள்ளனர். இதில், 35 எம்.எட்., பட்டதாரிகள், 49 பி.எட்., பட்டதாரிகள், 19 சாஸ்திரி பட்டம் பெற்றவர்கள் விண்ணபித்துள்ளனர்.