UPDATED : ஆக 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: முன்னாள் துணைவேந்தர் அகஸ்தியலிங்கத்தின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய இயக்குனராகப் பணியாற்றியவருமான அகஸ்தியலிங்கம் சாலை விபத்தில் சிக்கி அவரும், அவரது துணைவியும் மரணமடைந்த செய்தியைப் படித்து தாங்கொணா துயரம் அடைந்தேன்.
சில நாட்களுக்கு முன் கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் என்னோடு கலந்துகொண்டு என்னைப் பற்றி பாராட்டிய பெருமகன். மிகவும் அமைதியாக இருந்து தமிழ்ப் பணி ஆற்றிவந்த அவர், இவ்வளவு விரைவில் நம்மைவிட்டு பிரிந்துவிடுவார் என்று எண்ணவே இல்லை.
தமிழுக்கும், தமிழகத்துக்கும் இன்னும் பல்லாண்டு காலம் இருந்து பணியாற்ற வேண்டியவர் இயற்கையடைந்துவிட்ட செய்தி, ஈடுகட்ட முடியாத இழப்பு’ என்று தெரிவித்துள்ளார்.