UPDATED : ஜூன் 25, 2026 09:26 PM
ADDED : ஜூன் 25, 2026 09:27 PM
அ நிறம் | அளவு
சென்னை:
சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலையில், இந்திய கடலோர பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி நடந்தது.
அதில், சி.ஐ.எஸ்.எப்., எனும், மத்திய தொழில் பாதுகாப்பு படையுடன் இணைந்து, கடலோர பாதுகாப்பு குறித்த ஒப்பந்தத்தில், இந்திய கடல்சார் பல்கலை கையெழுத்திட்டது.
அதன்படி, வரும் ஐந்தாண்டுகளுக்கு, நாட்டின் துறைமுக பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி, ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வது உள்ளிட்ட செயல்பாடுகளில், இரு அமைப்புகளும் இணைந்து பணியாற்றும்.
முக்கியமாக, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கான, அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு சார்ந்த சிறப்பு பாடப்பிரிவுகள் மற்றும் பயிற்சிகளை, பல்கலை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
