அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை; நெல்லிக்குப்பம் பள்ளி மாணவிகள் சாதனை
அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை; நெல்லிக்குப்பம் பள்ளி மாணவிகள் சாதனை
UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 07:55 PM
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் அரசு பள்ளி மாணவிகள் இருவர் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் பயிற்சி பெற பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உதவி செய்து வருகின்றனர்.
இதன்மூலம், கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் பிளஸ் 2 படித்த வான்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் -வெண்ணிலா தம்பதியரின் மகள் தேவதர்ஷனி நீட் தேர்வில் 502 மதிப்பெண் பெற்று, அரசு ஒதுக்கீட்டில் சென்னை பல் மருத்துவக்கல்லுாரியில் பி.டி.எஸ்., சேர்ந்துள்ளார்.
இதேபள்ளியில் கடந்த 2022-2023ம் கல்வி ஆண்டில் படித்த மாணவி, கீழ்அருங்குணம் நத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெற்றிவேல் - அன்னலட்சுமி தம்பதியரின் மகள் அஸ்வினி அந்தாண்டு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றா லும், மனம் தளராமல் படித்து கடந்தாண்டு நீட் தேர்வில் 528 மதிப்பெண் பெற்றார். அதனையொட்டி அவர் அரசு ஒதுக்கீட்டில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்துள்ளார்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த இரு மாணவிகளையும் தலைமை ஆசிரியர் பூங்கொடி, பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதற்கு முன் இப்பள்ளியில் படித்த இரு மாணவிகள் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., படித்து வருவது குறிப்பிட தக்கது.