தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊழியர்கள் 5500 பேரை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாப்ட்

ஊழியர்கள் 5500 பேரை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாப்ட்

ஊழியர்கள் 5500 பேரை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாப்ட்


UPDATED : ஜூலை 02, 2026 10:57 AM

ADDED : ஜூலை 02, 2026 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2026 10:57 AM ADDED : ஜூலை 02, 2026 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
மைக்ரோசாப்ட் நிறுவனம் 2.5 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். விருப்ப ஓய்வு பெற விரும்புவர்கள் செய்து கொள்ளலாம் என்றும் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டும் பணிநீக்கம் நடவடிக்கை தொடர்ந்தது. முதல் கட்டமாக 6000 பேரும், 2ம் கட்டமாக 9000 பேரையும் நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இது ஒட்டுமொத்த ஊழியர்களில் 4 சதவீதம் ஆகும்.

இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் குறிப்பிடத்தக்க அளவு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் நிறவனம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் 2.5 சதவீதம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.

2.5 சதவீதம் என்பது உத்தேசமாக 5500 பேர் ஆகும். பணிநீக்கங்கள் பற்றிய அறிவிப்புகள் வரும் வாரங்களில் ஊழியர்களுக்கு நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us