மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு ஜனவரி 2ல் அரையாண்டு தேர்வு
மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு ஜனவரி 2ல் அரையாண்டு தேர்வு
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 09:02 AM

சென்னை :
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை, ஜனவரி 2 முதல் 10ம் தேதி வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள், பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
வரும், 24ம் தேதி முதல் ஜனவரி, 1ம் தேதி வரை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மழை பாதித்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் பொருந்தும்.
எனவே, அப்பள்ளிகளில் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை, ஜனவரி, 2 முதல் 10ம் தேதி வரை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.