தேசிய கலை கண்காட்சி போட்டி: படைப்புகளை அனுப்ப அழைப்பு
தேசிய கலை கண்காட்சி போட்டி: படைப்புகளை அனுப்ப அழைப்பு
UPDATED : செப் 29, 2025 08:22 AM
ADDED : செப் 29, 2025 08:23 AM
ஈரோடு:
தேசிய சட்ட சேவை தினத்தை முன்னிட்டு, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், 30 ஆண்டு கால சேவையை குறிக்கும் வகையில் தேசிய கலை கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
சமுதாய மேம்பாடு, நீதியை உறுதி செய்வதில் சட்ட உதவி மையங்களின் பங்கினை எடுத்துக்காட்டும் வகையில் ஓவியம், போட்டோ, ஒரு நிமிடம் ஓடும் வீடியோ படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள், பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், வக்கீல்கள், சட்ட உதவி நாடும் வழக்காடிகள், சட்ட உதவி மைய வக்கீல்கள், சட்ட உதவி தன்னார்வலர்கள், கோர்ட் ஊழியர், கோர்ட் சார்ந்த பிற அமைப்பினர் படைப்புகளை உருவாக்கலாம். இதற்காக கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் உருவாக்கப்படும் படைப்புகள் அக்.,9க்குள் செயலாளர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஈரோடு ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், ஈரோடு--638 011 என்ற முகவரியில் நேரில் அல்லது தபாலில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட முகவரி அல்லது dlsaerode1@gmail.comல் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.