UPDATED : மே 18, 2024 12:00 AM
ADDED : மே 18, 2024 10:48 AM

புதுச்சேரி :
தேசிய பால புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்து மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் 2025ம் ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையம் வழியாக வரும் ஜூலை 31ம் தேதி வரை பெறப்படுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்த வீர, தீர செயல், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுப்புறசூழல், கலை மற்றும் பண்பாடு, புதிய கண்டுபிடிப்புகள் அவற்றில் சிறந்து விளங்கிய 5 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் தேசிய அளவில் அடையாளம் பெற விண்ணப்பிக்கலாம். இவ்விருதுக்கு விண்ணப்பதாரர் (குழந்தை) தன்னிச்சையாகவோ (அ) பெற்றோர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் குழந்தையின் பெயரை பரிந்துரை செய்யலாம்.
இவ்விருது குறித்த முழு விவரங்களுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் துறையின் https://wcd.nic.in (ம) https.//wcd.py.gov.in வலைதள முகவரியை பார்வையிடவும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.