தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்

அரசு கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்

அரசு கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்


UPDATED : ஜன 26, 2026 12:16 PM

ADDED : ஜன 26, 2026 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2026 12:16 PM ADDED : ஜன 26, 2026 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.

இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு 'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வேதியியலின் பங்கு' தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு, முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். வேதியியல் துறை தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார்.

செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் அருண், 'அன்றாட வாழ்வில் வேதியியல்' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி, செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்படி, நிதியின்றி இந்த இரு கல்லுாரிகளுக்கு இடையே கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதாகும்.

கருத்தரங்கை பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், டேனியல் ஆரோக்கியராஜ், பாபு, சுரேஷ், ராணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us