தேசிய தர நிர்ணயக்குழு ஆய்வு; அரசு கல்லுாரியில் ஆலோசனை
தேசிய தர நிர்ணயக்குழு ஆய்வு; அரசு கல்லுாரியில் ஆலோசனை
UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM
ADDED : ஜூலை 12, 2024 09:20 AM
திருப்பூர்: சிக்கண்ணா கல்லுாரி, 1966ல்கட்டப்பட்டது. இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளில், 3,000க்கும் அதிகமானோர் படிக்கின்றனர். 2015 ல் முதல் நிலைக் கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டது. 2015ல் தேசிய தர மதிப்பீட்டு குழு பி சான்றிதழ் பெற்றது. 2018ல் தேசிய கல்வி நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு மற்றும் மதிப்பீட்டில் இக்கல்லுாரி இடம் பெற்றது. நேற்றும், இன்றும் (12ம் தேதி) கல்லுாரியில் தேசிய தர நிர்ணய குழு ஆய்வு நடத்த உள்ளது.
இதுதொடர்பான ஏற்பாடு மற்றும்ஆலோசனை கூட்டம், கல்லுாரியில் நேற்று நடந்தது. அகத்தர குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் தலைமை வகித்தார். செயலாளர்கள் சங்கமேஸ்வரன், விஜயன், ஜெலின்ஸ் தினகர், சிவதயாநிதி, சக்தி சுடர் சரவணன், ராதாகிருஷ்ணன், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், கல்லுாரியை இன்றும், நாளையும் வாரணாசி, ஹரியானா, குஜராத் பல்கலை சேர்ந்த துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி அகத்தர குழு மேற்கொண்டுவருகிறது என்றார்.