கட் ஆப் மதிப்பெண் குறைந்தவர்களை நர்சிங் படிப்பில் சேர்க்க வேண்டும் முதல்வருக்கு நாஜிம் எம்.எல்.ஏ., கோரிக்கை
கட் ஆப் மதிப்பெண் குறைந்தவர்களை நர்சிங் படிப்பில் சேர்க்க வேண்டும் முதல்வருக்கு நாஜிம் எம்.எல்.ஏ., கோரிக்கை
UPDATED : ஆக 15, 2024 12:00 AM
ADDED : ஆக 15, 2024 10:38 AM
புதுச்சேரி:
கட் ஆப் மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் சேர்க்க வேண்டும் என நாஜிம் எம்.எல்.ஏ., பேசினார்.
ஜீரோ நேரத்தில் அவர் பேசியதாவது:
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் செவியர்கள் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லுாரிகளில் உள்ள நர்சிங் படிப்புகளுக்கு எந்த ஆண்டும் இல்லாமல் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்காக நுழைவு தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
பக்கத்தில் உள்ள தமிழகத்தில் நர்சிங் நுழைவு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடக்கின்றது. அதுவும் இந்திய நர்சிங் கவுன்சில் கட்டுப்பாட்டில் தான் வருகின்றது. அப்படி இருக்கும்போது புதுச்சேரில் மட்டும் நர்சிங் படிப்புகளுக்கு நுழைவு தேர்வு அடிப்படையில் ஏன் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் எங்களுக்கு நீட் தேவையில்லை. அதேபோன்று நர்சிங் நுழைவு தேர்வும் தேவையில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டனர். புதுச்சேரியும் அப்படி சொல்லி இருந்தால் இப்போது நுழைவு தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பு படிக்க முடியாத மாணவர்கள் தான் அடுத்து நர்சிங் படிப்புகளை தான் தேர்ந்தெடுக்கின்றனர்.
நர்சிங் படிப்பில் கட் ஆப் மதிப்பெண் 50 சதவீதமாக உள்ளது. எனவே குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் நர்சிங் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க முதல்வர் உத்தரவிட வேண்டும். அடுத்தாண்டு நர்சிங் நுழைவு தேர்வினை கைவிட வேண்டும்.