UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 05:40 PM

சென்னை:
மத்திய திரைப்பட வாரியம் வயது மதிப்பீடுடைய புதிய சென்சார் சான்றிதழை கடந்த அக்., மாதம் முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது.
இதுவரை சென்சார் சான்றிதழில் யூ, ஏ மற்றும் யூஏ ஆகிய பிரிவுகளில் திரையிடுவதற்கான அனுமதி வழங்கி வந்தது. கடந்த அக்., 24ம் தேதி முதல் யூ, ஏ, யூஏ7+, யூஏ 13+, யூஏ 16+ என்னும் பிரிவுகளில் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
யூ வகை திரைப்படங்கள் எல்லா வயதினருக்கும், ஏ வகை திரைப்படங்கள் 18 வயது கடந்தவர்களுக்கு மட்டும் என முன்பு இருந்த நடைமுறையுடன் 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததாக யூஏ7+, யூஏ 13+, யூஏ 16+ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு அந்த திரைப்படத்தை பார்க்க அனுமதிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முன் அத்திரைப்படத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள cbfcindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.