மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 05:53 PM

மதுரை:
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மத்திய பல்கலைகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவு மாணவர்கள், 2024 - 25 ம்ஆண்டுக்கான புதியது, புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இம்மாணவருக்கு கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், இதர கட்டாய கட்டணம் ஆகியவற்றுக்காக மாணவர்கள் செலுத்திய தொகை அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இக்கல்வி உதவித்தொகைக்கு 2024 - 25 ம் ஆண்டில் புதிதாக, ஏற்கனவே விண்ணப்பித்து புதுப்பிக்க உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் படிவம் பெற்றோ அல்லதுhttp://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணைய முகவரியில் பதவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்கள் சான்றொப்பத்துடன், தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரைத்து, ஜன.15 க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனகலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.