UPDATED : நவ 16, 2024 12:00 AM
ADDED : நவ 16, 2024 10:34 AM
கோவை:
தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:
கடந்த சட்டசபை தேர்தலின் போது, பகுதிநேர ஆசிரியர்களை, 100 நாட்களில் பணி நிரந்தரம் செய்வோம் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை நம்பி பகுதிநேர ஆசிரியர்கள் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தனர்.
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், தி.மு.க., அரசு பணி நிரந்தரம் செய்ய வில்லை. பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடியும் அரசு கண்டு கொள்ளவில்லை. கடந்த, 13 ஆண்டுகளாக 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள், 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்துக்கு தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.
பகுதிநேர ஆசிரியர்களை வஞ்சிக்காமல் தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லை என்றால் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.