தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறந்த நிலை பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்

திறந்த நிலை பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்

திறந்த நிலை பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்


UPDATED : செப் 01, 2025 12:00 AM

ADDED : செப் 01, 2025 08:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2025 12:00 AM ADDED : செப் 01, 2025 08:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தேசிய திறந்த நிலை பள்ளியில், அடுத்த கல்வி யாண்டு முதல், விளையாட்டு வீரர்களுக்காக புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

மத்திய கல்வித்துறையின் கீழ் இயங்கும், தேசிய திறந்த நிலை பள்ளியில், ஆரம்ப கல்வி, எட்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், விளையாட்டில் ஆர்வமிருந்து, பள்ளியின் அன்றாட பாடங்களில் கவனம் செலுத்த முடியாத மாணவ - மாணவி யருக்காக, அடுத்த கல்வியாண்டு முதல், விளையாட்டு தொடர்பாக ஐந்து புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

பத்தாம் வகுப்பில், யோகா, உணவு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை ஆகிய மூன்று பாடங்களும், பிளஸ் 2 வகுப்பில் யோகா அறிவியல், விளையாட்டு மேலாண்மை என்ற இரண்டு பாடங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us