பெரும்பாக்கம் ஐ.டி.ஐ., வளாக சுற்றுச்சுவர் கட்டுமான பணி
பெரும்பாக்கம் ஐ.டி.ஐ., வளாக சுற்றுச்சுவர் கட்டுமான பணி
UPDATED : ஏப் 11, 2024 12:00 AM
ADDED : ஏப் 11, 2024 10:09 AM

சென்னை:
கடந்த 2019ல், பெரும்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் துவக்கப்பட்டது. மொத்தம், 27,000 சதுர அடி பரப்பில், 10 கோடி ரூபாயில் கட்டடம் கட்டப்பட்டது.
இதில், ஆறு வகுப்பறைகள், ஐந்து தொழில் பயிலும் மையம், அலுவலகம், ஆவண காப்பகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, ஆய்வகம், கூட்ட அரங்கு, கழிப்பறைஉள்ளிட்ட வசதிகளுடன் அமைந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம், புது கட்டடம் திறக்கப்பட்டது. இதன் அருகில்,தமிழக அரசு சார்பில், 3.70 கோடி ரூபாயில், உயர் தொழில்நுட்ப மையம்கட்டப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்த வெளியில் உள்ளது.
உயர்தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளதால், பாதுகாப்பை கருத்தில் வைத்து, 4.50 ஏக்கர் இடத்தை சுற்றி, தடுப்பு சுவர் கட்ட முடிவுசெய்யப்பட்டது. இதன்படி, 70 லட்சம் ரூபாயில், 350 மீட்டர் நீளம், 8 அடி உயரத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது.
வரும் கல்வியாண்டு முதல், ஒரே வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் ஐ.டி.ஐ., செயல்படும் என, அதிகாரிகள் கூறினர்.