தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் 7,585 மாணவர்கள் எழுதுகின்றனர்

பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் 7,585 மாணவர்கள் எழுதுகின்றனர்

பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் 7,585 மாணவர்கள் எழுதுகின்றனர்


UPDATED : மார் 01, 2026 12:48 PM

ADDED : மார் 01, 2026 12:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 01, 2026 12:48 PM ADDED : மார் 01, 2026 12:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
நாளை துவங்கும் தமிழக பாடதிட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 20 மையங்களில் 7,585 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

புதுச்சேரி அரசுக்கு என தனி கல்வி வாரியம் இல்லை. அதனால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக பாட திட்டமும், ஏனாமில் ஆந்திர பாடத்திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும் பின்பற்ற வந்தது.

இந்நிலையில் கடந்த 2024 - 25 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகள் தொடர்ந்து தமிழக பாடதிட்டத்தை பின்பற்றி வருகின்றன.

தமிழக பாடத்திட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை 2ம் தேதி துவங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவ, மாணவிகள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுத உள்ளனர். இவர்களுடன் தனித் தேர்வர்களாக புதுச்சேரியில் 173 பேரும், காரைக்காலில் 112 பேர் எழுத உள்ளனர்.

இவர்களுக்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில், புதுச்சேரியில் 20 மையங்களும், காரைக்காலில் 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்வதற்காக புதுச்சேரியில் 6, காரைக்காலில் 2 வழித்தட அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை, நிலைப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் கட்டாயம் ஹால் டிக்கெட் கொண்டு வர வேண்டும். தனித் தேர்வர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வறைக்குள் மொபைல் போன் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களுக்கும் அனுமதி இல்லை. இத்தகவலை, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us