sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு: புதிய நடைமுறை

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு: புதிய நடைமுறை

பிளஸ் 2 பொதுத்தேர்வு: புதிய நடைமுறை

பிளஸ் 2 பொதுத்தேர்வு: புதிய நடைமுறை


UPDATED : மார் 01, 2026 12:31 PM

ADDED : மார் 01, 2026 12:34 PM

Google News

UPDATED : மார் 01, 2026 12:31 PM ADDED : மார் 01, 2026 12:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில், வினாத்தாள் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை துவங்குகிறது. முன்பு தேர்வு மையத்தில், தலைமை ஆசிரியர் அறை அல்லது ஒருங்கிணைந்த கூடத்தில் இருந்து வினாத்தாள்களை அந்தந்த அறை கண்காணிப்பாளர்கள், தங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வறைக்கு எடுத்து செல்வர்.

நடப்பாண்டு இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளருக்கு முன்கூட்டியே அறை ஒதுக்கப்படாது.

குலுக்கல் முறையில் அறை ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட அறைக்கு அவர்கள் சென்ற பின், முதன்மை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஒவ்வொரு தேர் வரைக்கும் சென்று வினாத்தாள்களை வழங்குவர். வினாத்தாள் கட்டை பிரித்து வழங்கிய பின், வகுப்பறையில் 2 மாணவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டு வந்தது.

தற்போது தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் பெறப்பட்ட பின்பும், கையொப்பம் பெற வேண்டும்.

'தேர்வு முறை கேடுகளை தடுக்கவும், பணிகளை வேகப்படுத்தி ஒருங்கிணைக்க ஏதுவாகவும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது' என்கின்றனர் தேர்வுத்துறை அதிகாரிகள்.






      Dinamalar
      Follow us