UPDATED : ஆக 22, 2026 11:17 PM
ADDED : ஆக 22, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
உடுமலை:
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 28ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும் முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலை தேடுவோரை தேர்வு செய்ய உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும்.
10ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். நிறுவனங்கள், வேலை தேடுவோர் 'tnprivatejobs.tn.gov.in' தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
