UPDATED : பிப் 04, 2025 12:00 AM
ADDED : பிப் 04, 2025 11:07 PM

'நம் நாடு செழிப்பாகவும், முன்னேற்றம் காணவும், இலக்குகளை அடையவும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவது அவசியம். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் ஈடுபடாமல் எவரும் உலகில் முன்னேற முடியாது.
மேலும், நாட்டின் வளர்ச்சியில் ஆரோக்கியமான சமுதாயமும் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது', என்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த முதலாவது சர்வதேச ஒலிம்பிக் ஆராய்ச்சி மாநாட்டில் பேசிய அவர், '2047ம் ஆண்டில் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடுகையில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக திகழ வேண்டும்.
அதற்கு உறுதுணையாக உடல் நலன் மட்டுமின்றி மன நலனில் அக்கறை செலுத்துவதும் அவசியம். விளையாட்டு அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் வாயிலாக அத்தகைய இலக்கை நாம் அடைய முடியும்.', என்று குறிப்பிட்டுள்ளார்.