sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி:முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா

/

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி:முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி:முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி:முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா


UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM

ADDED : ஜூலை 08, 2024 08:36 AM

Google News

UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM ADDED : ஜூலை 08, 2024 08:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் தொடக்க விழா ஜூலை 3ம் தேதி நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் 13 இளநிலை பட்டப் படிப்புகளையும், 3 முதுநிலை பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது. இக்கல்லூரியில் ஜூலை 3ம் தேதி 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாகத் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை குழுத் தலைவர் திரு. டி. துரைசாமி, துணைத்தலைவர் பரந்தாமன், செயலர் தசரதன், பொருளாளர் அமர்நாத், இணைச்செயலாளர் கோபிநாத், தாளாளர் வெங்கடேஷ் ராஜா, இயக்குநர்கள் சரஸ்வதி, டாக்டர் அரவிந்த், சபரிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் வரலாறு பற்றியும், கடந்து வந்த பாதைகள் குறித்தும் நிறுமச் செயலாண்மைத் துறைத்தலைவர் முனைவர் கணபதி எடுத்துரைத்தார். கல்லூரி அறக்கட்டளைச் செயலர் தசரதன், தாளாளர் வெங்கடேஷ் ராஜா ஆகியோர் தலைமை உரை நிகழ்த்தினர்.

சிறப்பு விருந்தினர் இந்திய இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அருண் அனந்தநாராயணன் தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்தி மாணவர்களுக்குத் தேவையான வாழ்வியல் ஒழுக்கங்கள் பற்றிப் பேசினார். ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன மனநலத்துறைத் தலைவர் டாக்டர் அசோகன் மனநலத்தைப் பேணும் முறைகள் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் சந்திரசேகர் நன்றியுரை வழங்கினார்.






      Dinamalar
      Follow us