UPDATED : அக் 18, 2024 12:00 AM
ADDED : அக் 18, 2024 12:46 PM

திருப்பூர்:
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் நாடு முழுதும் உள்ள பல்கலை மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உயர்கல்வித்துறை, கல்லுாரி கல்வி இயக்ககம் தரப்பில் இருந்து அனைத்து பல்கலை, அரசு கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை வழிகாட்டுதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்து கல்லுாரி படிப்பில் இணைந்துள்ள மாணவ, மாணவியரில் தகுதியானவர்களுக்கு இளங்கலை படிப்புக்கு 10 ஆயிரம் ரூபாய்; முதுகலைக்கு 20 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2024 மார்ச், ஏப்ரலில் நடந்த மேல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவியர் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்.
2018 முதல் விண்ணப்பித்து கிடைக்காதவர்களும் இணையதளத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம். யார் - யார் தகுதியானவர்கள், இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் என்ன, உதவித்தொகை குறித்த கூடுதல் விபரங்கள் இணையளத்தில் உள்ளன.