UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச், 26 முதல், ஏப்., 8 வரை நடந்தது.
10 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். ஆனால் அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு படித்து தேர்வு எழுதாத மாணவர்கள், தேர்ச்சி பெற தவறும் மாணவர்கள், பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் சூழல் உள்ளது.
இதை தவிர்க்க, தேர்வு எழுதாதவர்கள், தேர்ச்சி பெற தவறிய மாணவ - மாணவியரை, பள்ளிகளுக்கு வரவழைத்து சிறப்பு வகுப்பு நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக ஜூனில் நடக்க உள்ள துணை தேர்வில் பங்கேற்க வைத்து, வரும் கல்வியாண்டிலேயே கல்வியை தொடர செய்யும்படி சிறப்பு வகுப்புக்கு முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.