UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 09:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யவும், திட்-டத்தை மேம்படுத்தவும், சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, 38 மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட, 954 சத்துணவு மையங்களில் சமூக தணிக்கை அலகு சார்பில் இரு கட்டங்களாக ஆய்வு நடத்த முடிவு செய்-தனர். இதில் முதல் கட்ட ஆய்வு கடந்த, 1-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.
ஈரோடு இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தினர். இதை தொடர்ந்து சிறப்பு சபை கூட்டம் பள்ளியில் நேற்று மாலை நடந்-தது. இதில் தணிக்கை குழு அலுவலர்கள், மாநகராட்சி அதிகா-ரிகள் பங்கேற்றனர். இரண்டா-ம் கட்ட ஆய்வு, 12ம் தேதி வரை நடக்கிறது.