sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அழிந்து வரும் மரகத ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்: மாணவர்கள் வேண்டுகோள்

/

அழிந்து வரும் மரகத ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்: மாணவர்கள் வேண்டுகோள்

அழிந்து வரும் மரகத ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்: மாணவர்கள் வேண்டுகோள்

அழிந்து வரும் மரகத ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்: மாணவர்கள் வேண்டுகோள்


UPDATED : ஆக 29, 2025 12:00 AM

ADDED : ஆக 29, 2025 08:35 AM

Google News

UPDATED : ஆக 29, 2025 12:00 AM ADDED : ஆக 29, 2025 08:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
'புகழ்பெற்ற, ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் உள்ள 17ம் நுாற்றாண்டு விஜயரகுநாத சேதுபதி காலத்து மரகத ஓவியங்கள் அழியும் தருவாயில் உள்ளன. அவற்றை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும்' என, வரைகலை பயிற்சிக்கு சென்ற சென்னை அரசு கவின் கலை கல்லுாரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பேராசிரியர்கள் கு.கவிமணி, பாண்டி ஆகியோர் தலைமையில், சென்னை அரசு கவின் கலைக் கல்லுாரி மாணவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவில், திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில், மூன்று நாள் வரைகலை பயிற்சிக்கு சென்றனர்.

பயிற்சி கோவிலில் உள்ள சிற்பங்களின் நுணுக்கங்கள், அளவீடுகள், வடிவமைப்பு முறைகள், கட்டடக்கலை அளவீடுகளை கண்டறிந்து, ஆய்வு செய்து தகவல் சேகரித்தனர்.

அதேபோல், நாகக்கன்னி சிற்பம், அழகிய மரக்கதவுகள், சிற்ப துாண்கள், கல் கருட பகவான், மரச்சிற்பம் உள்ளிட்ட சிற்பங்களை வண்ண ஓவியங்களாகவும், கோட்டோவியங்களாகவும் வரைந்து, வரைகலை பயிற்சி மேற்கொண்டனர்.

ஆய்வு குறித்து, அவர்கள் கூறியதாவது:



உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில், சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக, இரண்டு ஆண்டுகளாக கோவில் திருப்பணிகள் நடந்தன. ஆனால், அக்கோவிலில் உள்ள சிறப்பு வாய்ந்த மரகத ஓவியங்கள் செப்பனிடப்படவில்லை.

இக்கோவிலில் உள்ள மூலவர் நடராஜர், பச்சை மரகதக் கல்லில் எழுந்தருளியுள்ளார். இக்கோவில் உட்புறச் சுவர்கள் முழுதும் வண்ண சுவர் ஓவியங்கள் இருந்துள்ளன.

சமூகத்தின் சொத்து ஆனால், அவை பராமரிப்பின்றி அழிந்து, தற்போது மேல்கூரையில் மட்டும் எஞ்சியுள்ளன. இவை, 17ம் நுாற்றாண்டு விஜய ரகுநாத சேதுபதி காலத்து மரகத ஓவியங்களாகும். எஞ்சியுள்ள ஓவியங்களும் வண்ண தீட்டலில் தனிச் சிறப்பு பெற்றவை.

இந்த சுவர் ஓவியங்களில் பயன்படுத்தியுள்ள பச்சை வண்ணம், மரகத தன்மையை வெளிப் படுத்துகிறது. தமிழகத்தில் வேறு எந்த சுவர் ஓவியங்களிலும், இந்த பச்சை வண்ணம் காணப்படவில்லை.

எனவே, வண்ணம் மற்றும் ஓவிய நுட்ப வகைகளில், மரகத நடராஜர் கோவில் சுவர் ஓவியங்கள், தமிழகத்தின் அறிவியல், பண்பாடு அறிவு சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும். ஓவியங்கள் இடம்பெற்ற சுவர்களில், மின்சார வேலைப்பாடுகள் நடந்துள்ளன; அவை களையப்பட வேண்டும்.

மேலும், இந்த ஓவியங்களை புத்தகங்களாக ஆவணப்படுத்த வேண்டும். ஓவியங்களை வீடியோ பதிவு செய்து, அதன் சிறப்புகள் குறித்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விளக்க வேண்டும்.

அதேபோல், ராமனின் தந்தை தசரத மஹாராஜா பூஜித்ததாகக் கூறப்படும், திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் சிற்பங்கள், வில், அம்புடன் கூடிய சிறப்பு வாய்ந்ததாக உள்ளன.

சயன ராமன் இவை, ராமனுக்கு வேடர்கள் பாதுகாப்பு அளித்ததாக அமைந்துள்ளன. இதுவரை யாரும் இதை குறிப்பிடவில்லை. இந்த ஆய்வின் வாயிலாக, முதன்முறையாக நாங்கள் உறுதி செய்கிறோம்.

வரலாற்றுடன் தொடர்புடைய கோவிலாக கருதப்படும் இங்கு, சிறப்பு வாய்ந்த சயன ராமன் சன்னிதி உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, மரபு வழியில், கட்டுமானத்தை புனரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us