UPDATED : ஏப் 08, 2024 12:00 AM
ADDED : ஏப் 08, 2024 09:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 56. உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியர்.
இவர், மாணவி ஒருவரிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், நேற்று பள்ளிக்குச் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசில் புகார் அளித்தனர்.
உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் ஆசிரியர் சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.