UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:32 PM
புதுடில்லி:
ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் படிப்பறிவில்லாதவர்களாக வைத்திருக்க ஆளும் பாஜக அரசு விரும்புவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் படிப்பறில்லாதவர்களாக வைத்திருக்க விரும்புகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கல்வி முறை நசுக்கப்படுகிறது. தற்போது, டில்லியிலும் கல்வி முறையை அழிக்க பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர், என்றார்.
அவமதித்த காங்கிரஸ்!
நித்யானந்த் ராய், மத்திய அமைச்சர், பா.ஜ., கூறுகையில் நாட்டில் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே, சட்டமேதை அம்பேத்கரின் நோக்கம். இதற்காகவே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், அம்பேத்கரை அவமதித்த கட்சி, காங்கிரஸ்; தேர்தலில் அவரை காங்கிரஸ் தோற்கடித்தது என்றார்.
அடிக்கடி மின் தடை!
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி டில்லியில் எங்கு பார்த்தாலும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆம் ஆத்மி ஆட்சியின் போது மின் தடை ஏற்படவில்லை என, அவர்களே கூறுகின்றனர். பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டது தவறு என, மக்கள் உணர்கின்றனர் என்றார்.