UPDATED : செப் 04, 2024 12:00 AM
ADDED : செப் 04, 2024 08:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
திருப்பூர் திருக்குறள் பேரவை சார்பில், கற்பித்தல் பணி மட்டுமின்றி, மாணவர் நலன் சார்ந்த பிற பணிகளில் சேவை மனப்பான்மையுடன் ஈடுபடும் ஆசிரியர்களில், நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, லட்சிய ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
திருப்பூர், ராயபுரம் ரோட்டரி மெட்ரிக்., பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, திருக்குறள் பேரவை தலைவர் அரங்கசாமி, தலைமை வகித்தார். செயலாளர் வனஜா வரவேற்றார். நஞ்சப்பா பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் துரைசாமி, பழனியம்மாள் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஏ.துரைசாமி, நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, பேரவை துணை தலைவர் கலாதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினார்.