வரும் 9ல் ஈரோட்டில் திருக்குறள் வினாடி வினா தேர்வு
வரும் 9ல் ஈரோட்டில் திருக்குறள் வினாடி வினா தேர்வு
UPDATED : ஜன 08, 2026 10:34 AM
ADDED : ஜன 08, 2026 10:34 AM
ஈரோடு:
திருப்பூரில் நடக்கும் குறளாசிரியர் மாநாட்டில் பங்கேற்க அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வு ஜன., 9ல் ஈரோட்டில் நடக்கிறது. ஜனவரி மாதத்தில் திருக்குறள் வார விழாவை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் வரும், 21ல் குறளாசிரியர் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து, 15 ஆசிரியர்கள் (அரசு, அரசு நிதி உதவி, அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளி கல்லூரிகள்), 15 அரசு ஊழியர்கள் (அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து துறை அலுவலர்) பங்கேற்கலாம்.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 30 பேரை தேர்வு செய்ய, திருக்குறள் வினாடி வினா தேர்வு வரும், 9ம் தேதி மதியம், 2:00 மணிக்கு ஈரோடு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கவுள்ளது.
தேர்வில் பங்கேற்பவர்களுக்கு கியூ.ஆர்.கோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்தும் பங்கேற்கலாம். தேர்வு மையத்துக்கு வந்தும் பதிவு செய்தும் கலந்து கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

