தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய தேர்வுகள் முகமை அமைப்புக்கு 3 இயக்குனர்கள் நியமனம்!

தேசிய தேர்வுகள் முகமை அமைப்புக்கு 3 இயக்குனர்கள் நியமனம்!

தேசிய தேர்வுகள் முகமை அமைப்புக்கு 3 இயக்குனர்கள் நியமனம்!


UPDATED : ஆக 30, 2026 09:36 AM

ADDED : ஆக 30, 2026 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 09:36 AM ADDED : ஆக 30, 2026 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தேசிய தேர்வுகள் முகமை இயக்குனர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள், மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கல்வித்துறை கீழ் இயங்கும், தேசிய தேர்வுகள் முகமை எனும், என்.டி.ஏ., 'நீட், ஜே.இ.இ., யு.ஜி.சி., நெட், க்யூட்' உட்பட, பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது.

'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், என்.டி.ஏ., அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், என்.டி.ஏ., இயக்குனர்களாக, ஐ.பி.எஸ்., அதிகாரி ரவிக்குமார் சிங், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோர், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அமித் சம்தாரியா இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 'இன்போசிஸ்' இணை நிறுவனர் நந்தன் நீல்கேணி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, தேர்வு முறை சீர்த்திருத்தம் தொடர்பாக, பொது மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசு அமைப்புகள் கருத்து தெரிவிக்க, அழைப்பு விடுத்துள்ளது. https://examreforms-taskforce.dopt.gov.in இணையதளத்தில், செப்., 13ம் தேதி வரை, கருத்து தெரிவிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us